கோப்புப் படம்
கோப்புப் படம்

கவனக் குறைபாடு பெண்களைவிட ஆண்களுக்கு குறைவான ஆயுள்!

ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்களுக்கு குறைவான ஆயுள்காலம் இருப்பதாக ஆய்வில் தகவல்
Published on

கவனப் பற்றாக்குறை ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்கள் குறைந்த ஆயுள்காலம் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கவனப் பற்றாக்குறை ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் (ADHD) பாதிக்கப்பட்டவர்களை சாதாரண மக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களை சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது, ஆண்கள் 6.7 ஆண்டுகள்வரையில் குறைவாகவும், பெண்கள் 8.6 ஆண்டுகள் குறைவாகவும் ஆயுள்காலம் கொண்டிருப்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்தது.

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், ஆர்வமுள்ளவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துவர்; ஆனால், சாதாரண பணிகளில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம்.

இவர்கள் அதிகப்படியான இயக்கம் மற்றும் பேச்சு, மனத் தடுமாற்றம், அமைதியின்மை, சமூக விலகலுடன் காணப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com