அமெரிக்க விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை! 67 பேரின் நிலை?

அமெரிக்க விமான விபத்து மீட்பு நடவடிக்கைகள் பற்றி...
தேடுதல் பணியில் வீரர்கள்.
தேடுதல் பணியில் வீரர்கள்.AP
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்க முற்பட்டபோது ராணுவத்தின் பயிற்சி ஹெலிகாப்டர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.

பயணிகள் விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணித்த நிலையில், விமானமும் ஹெலிகாப்டரும் வெடித்து போடோமாக் நதியில் விழுந்துள்ளது. இதுவரை 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பில் உள்ள வான் மண்டலமான வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் இந்த விபத்து நடந்துள்ளதால் அமெரிக்காவில் பதற்றம் நிலவுகிறது.

தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புப் படை வீரர்கள், காவல்துறையினர், மருத்துவக் குழுக்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் நதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேடுதல் பணிகள் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புப் படைத் தலைவர் ஜான் டோனெல்லி, ”நதியில் உள்ள தண்ணீர் மிகவும் மோசமாக இருக்கிறது. கடுமையான பனிப் பொழிவு இருக்கும் சூழலில் மீட்புப் படையினர் தண்ணீரில் இறங்கினால் அவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து நடந்த நதிக்கரைகளில் வெளிச்சமும் இல்லாததால் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைய சில நாள்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.

விமான விபத்தானது புதன்கிழமை இரவு 9 மணியளவில் நடந்த நிலையில், 7 மணிநேரமாகியும் ஒருவர்கூட உயிருடன் மீட்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

இதனிடையே, வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 11 மணிவரை விமானங்களை இயக்க தடை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com