ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதம்
விமானப் படையை வலுப்படுத்த அமெரிக்காவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
விமானப் படையை வலுப்படுத்த அமெரிக்காவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைX | DGPR (AIR FORCE)
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் தவித்தது. மேலும், போரில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆயுதங்களையும் உபகரணங்களையும் மீறி, பாகிஸ்தானின் ராணுவ இலக்குகளை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கின.

இந்த நிலையில், சீனாவின் ஆயுதங்கள் பெரிதளவில் பயனளிக்காமல் போனதாலும், பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அணுகியுள்ளதாகத் தெரிகிறது.

சில நாள்களுக்கு முன்னர், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிர் சென்றுவந்த நிலையில், தற்போது விமானப் படைத் தளபதியும் சென்றுள்ளார்.

கடந்த பத்தாண்டுகால வரலாற்றில் அமெரிக்காவுக்கு ஒருமுறைகூட சென்றிராத பாகிஸ்தான் விமானப்படை தளபதி, தற்போது சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பென்டகனில் அமெரிக்க விமானப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் டேவிட் ஆல்வின் உள்பட உயர்மட்ட அமெரிக்க இராணுவ மற்றும் தலைவர்கள், வெளியுறவு அதிகாரிகளையும் பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி ஜாகீர் அகமது பாபர் சித்து சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, பாகிஸ்தான் விமானப்படையை நவீனமயமாக்க பல மேம்பட்ட அமெரிக்க ராணுவ தளங்கள், இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான ராணுவப் பரிமாற்றங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, மே 6 ஆம் தேதி நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், காஷ்மீரில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பாகிஸ்தானின் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!

Summary

PAF in US after Chinese equipment comes a cropper in Op Sindoor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com