
சீனாவில் பெய்து வரும் கனமழையால், நேபாள நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (ஜூலை 7) இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால், அண்டை நாடான நேபாளத்தின் பொடேக்கோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரவௌசா மாவட்டத்தில் அமைந்திருந்த நேபாளம் மற்றும் சீனா இடையிலான முக்கிய எல்லைப் பாலமானது, இன்று (ஜூலை 8) அதிகாலை 3.15 மணியளவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வெள்ளம் இருநாடுகளிலும் பலத்த சேதாரங்களை உருவாக்கியதுடன், 6 சீனர்கள் உள்பட 18 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து, நேபாளத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், வெள்ளத்தால் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் பயங்கர சேதமடைந்ததாகவும், 2 காவல் துறையினர் உள்பட 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாளத்தின் ராணுவம், ஆயுத காவல் படையினர் மற்றும் அந்நாட்டு காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: தெலங்கானா ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.