ஆக. 1முதல் கூடுதல் வரி விதிப்பு அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது! -டிரம்ப்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை(ஜூலை 8) தெரிவித்தார்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்AP
Published on
Updated on
1 min read

வெளிநாட்டு பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை(ஜூலை 8) தெரிவித்தார்.

டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நாடுகளுக்கு திங்கள்கிழமை(ஜூலை 7) கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில், தற்போது டிரம்ப்பால் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதத்தில் வரி செலுத்துவது ஆகஸ்ட் 1முதல் கட்டாயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

Summary

Trump Rules Out Extension To August 1 Tariff Deadline - "There Will Be No Change"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com