இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் எப்போது? - டிரம்ப் பதில்!

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் பற்றி டிரம்ப் கருத்து...
Trump Netanyahu
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்.IANS
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

தற்போது இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சமீபமாக 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் நெதன்யாகுவுடனான சந்திப்பிற்குப் பின்னர் அமெரிக்காவில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப்,

"இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் காஸாவில் போர்நிறுத்தம் வர வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். எப்போது என உறுதியாகச் சொல்ல முடியாது.

எனினும் இந்த வாரத்தில் இஸ்ரேல் - காஸா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்று தெரிவித்தார்.

ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்பதற்காகவே டிரம்ப் - நெதன்யாகு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Summary

US President Donald Trump said there is a very good chance of a ceasefire in Gaza either this week or next week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com