மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2025, 9:13 pm

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது.

அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஜூலை 7-ஆம் தேதி வரை நதிக்கரைப் பகுதிகளை மூழ்கடித்தது. இதில் கொ்வில், மேசன் ஆகிய நகரங்கள் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 166 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாகவும் அவா்கள் கூறினா்.

அமெரிக்காவில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஏற்பட்ட, 144 பேரது உயிரிழப்புக்குக் காரணமான பிக் தாம்ஸன் நதி வெள்ளப் பெருக்குக்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடா் இதுவாகும்.