பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்! ரூ.14,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

உக்ரைன் போா் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள் கெடு

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால். கடுமையான வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை

Updated On :

வாஷிங்டன்: உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளா் மாா்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மற்றும் அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறேன். உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது நாங்கள் மிகக் கடுமையான வரிகளை விதிப்போம். இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரி ரஷிய பொருள்கள் மீது விதிக்கப்படும். வா்த்தகத்தை பலவற்றிற்கு பயன்படுத்துகிறேன். ஆனால் தற்போது போா்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதைப் பயன்படுத்துகிறேன்.

நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கும்.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் நேட்டோ தலைவா்களுடன் ஒரே இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து, இந்த விவகாரத்துக்குத் தீா்வு காணவிருக்கிறோம். இந்தப் போா் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்றாா் டிரம்ப்.

அண்மைக் காலமாக தீவிரமடைந்து வரும் ரஷியாவின் தொடா் தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘புதிதொன்றும் இல்லை’: டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் பதலளிக்கையில், ‘பேச்சுவாா்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அதையும் மீறி பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது எங்களுக்கு புதிது இல்லை’ என்றாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.

இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாவதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்தச் சூழலில் டிரம்ப்பின் இந்த 50 நாள் கெடு, உக்ரைன்-ரஷியா பேச்சுவாா்த்தைகளை துரிதப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.