புகழ்பெற்ற மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் காலமானார்!

அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த ஜாம்பவானான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா காலமானார்.
Legendary WWE wrestler Hulk Hogan dies
ஹல்க் ஹோகன்.
Published on
Updated on
1 min read

அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த ஜாம்பவானான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா காலமானார். அவருக்கு வயது 71.

புகழ்பெற்ற டபிள்யூடபிள்யூஇ(WWE) மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா மாரடைப்பால் வியாழக்கிழமை மரணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாள்களாக ஹல்க் ஹோகன் கோமாவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் கோமாவில் இருப்பதாக வந்த வதந்திகளை அவரது மனைவி ஸ்கை மறுத்திருந்த நிலையில், இவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹல்க் ஹோகன்
ஹல்க் ஹோகன்

1953 ஆண்டு ஜார்ஜியாவின் அகஸ்டாவில் பிறந்த ஹல்க் ஹோகனுக்கு டெர்ரி யூஜின் போல்லியா என அவரது பெற்றோர் பெயரிட்டிருந்தனர். பின்னர், ஹல்க் ஹோகன் என்ற பெயரில் 1980 - 1990 ஆண்டுகளின் முற்பகுதியில் மிகவும் புகழ்பெற்றார். 

90-ஸ் குழந்தைகளின் மிகவும் பிடித்தமான டபிள்யூடபிள்யூஇ நிகழ்ச்சியில் நீங்கா இடம்பிடித்த ஹல்க் ஹோகனின் இழப்பால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவரது இறப்புக்கு ரசிகர்களும், மல்யுத்த வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டபிள்யூடபிள்யூஇ(WWE)வில் 6 முறை சாம்பியன்ஷிப்களை வென்ற ஹல்க் ஹோகன், 2005 ஆம் ஆண்டில் இவரது பெயர் டபிள்யூடபிள்யூஇ(WWE) ஹால் ஆஃப் ஃபேமிலும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Legendary WWE wrestler Hulk Hogan dies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com