வியத்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியத்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bus accident in Vietnam kills 9, including children
விபத்து(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

வியத்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியத்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேருந்து திடீரென சாலையை விட்டு விலகி போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

மேலும் 16 பேர் காயமடைந்தனர் என்று அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!

வியத்நாமில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 5,024 பேர் பலியாகியுள்ளனர்.

Summary

At least nine people, including children, were killed and 16 others injured when a passenger bus crashed in central Vietnam early on Friday, Al Arabiya reported, citing a government statement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com