சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?
சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது இது.
இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு விஷயங்களால் மற்ற நாடுகளிலிருந்து தனித்து இருக்கிறது. அதாவது சொந்தமாக இந்த நாட்டுக்கு என்று தனி விமான நிலையம் கிடையாது, சொந்தமாக பணமோ நாணயமோ வெளியிட்டது இல்லை. அவ்வளவு ஏன், உள்ளூர் மொழி என்று எதையும் அறிவித்ததில்லை.
ஆனால், உலகிலேயே லிச்டென்ஸ்டெய்ன் நாடு தான், மிகவும் பணக்கார நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் அறியப்படுகிறது.
இன்னமும் அரண்மனைகளில் வாழும் தேவதைகளின் கதைகளைப் பேசிக்கொண்டும், மலைப்பாங்கான நிலப்பரப்பில் எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தபடியும் குற்றச் சம்பவங்களுக்கு இடம்கொடாமல் இருக்கிறது அந்த நாடு. அது மட்டுமா பல வீடுகளுக்கு இங்கே பூட்டுகளே இல்லை.
மிகச் சிறப்பான வங்கித் துறை, உற்பத்தித் துறையில் முன்னோடி, வளர்ச்சி என்பது சமுதாயம் சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கும் நிலை, வாழும் முறையில் ஏற்பட்ட நாகரீகப் பாங்கு என அனைத்தும் இந்த நாட்டை பணக்கார நாடாக மாற்றியிருக்கிறது.
அண்மையில் வெளியான இன்ஸ்டாகிராம் விடியோ மூலமாகத்தான் இந்த நாட்டின் பல விஷயங்கள் உலகின் வெளிச்சத்துக்கு வந்து வைரலாகியிருக்கிறது.
இந்த விடியோவைப் பார்க்கும் பலரும், எப்படி இப்படி ஒரு நாடு உலகின் பல மோசமான விவகாரங்களிலிருந்து தொலைவில், இன்னமும் இந்த உலகத்தில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது என்று மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
மலையடிவாரம் என்பதால் இந்த நில அமைப்பு காரணமாக விமான நிலையம் அமைக்கப்படவில்லை. இங்கிருக்கும் மக்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் சுவிட்சர்லாந்து அல்லது ஆஸ்ட்ரியா சென்றுதான் அங்கிருந்து விமானம் மூலம் பயணிக்க முடியும். இந்த நாட்டுக்கு என சொந்தமாக எந்த பணமும் இல்லை. சுவிஸ் பிராங்க் தான் பயன்படுத்தப்படுகிறது.
இவர்களது உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தாமல் அலுவல் மொழியாக ஜெர்மன்தான் உள்ளது. ஆனால், பலமான பொருளாதாரம், தனித்துவம் பெற்ற ஆட்சி, இணக்கமாக சமுதாயம் போன்றவை, உலகிலேயே மிகச் சிறந்த நாடு என்ற மகுடத்தை இந்நாட்டுக்கு வழங்கியிருக்கிறது.
Liechtenstein, a country bordered by Switzerland and Austria, is the richest country in Europe.
இதையும் படிக்க.. வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.