பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வங்கதேச கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவா் செயல்பாட்டாளா் தில்லி விமானநிலையத்தில் கைது

இந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காக தனது நாட்டில் தேடப்பட்டு வந்த வங்கதேச மாணவா் செயல்பாட்டாளா் ஒருவா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

இந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காக தனது நாட்டில் தேடப்பட்டு வந்த வங்கதேச மாணவா் செயல்பாட்டாளா் ஒருவா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

அகமது ராசா ஹசன் மெஹ்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஐரோப்பிய நாட்டிற்கு விமானத்தில் ஏற முயன்றபோது குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கதேசத்தில் உள்ள ஹபிகஞ்சில் வசிக்கும் மெஹ்தி, ஆகஸ்ட் 5, 2024 அன்று சப்இன்ஸ்பெக்டா் சந்தோஷ் சவுத்ரி கொலை தொடா்பாக அவா் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்கிறாா்.

அகமது ராசா ஹசன் மெஹ்தி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு பின்னா் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.