அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Updated On :3 ஜூன் 2025, 1:08 am IST

இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தைக் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓா் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தானால் பிரச்னை ஏற்படுகிறது என்று கூறப்படுவதில் சிறிதளவும் உண்மையில்லை. காஷ்மீா் பிரச்னை மட்டுமே பிராந்திய அமைதியை சீா்குலைத்து வருகிறது. காஷ்மீா் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீா்வுகாண வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீா் மக்களின் எண்ணங்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். இதைத்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முன்வைத்தது.

அமைதியையும், உறுதியான நட்புறவையும் பாகிஸ்தான் எப்போதும் விரும்புகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் முழுமையாக இந்திய பிராந்தியம் என்பதிலும், அதுகுறித்து யாரிடமும் பேச்சு நடத்த தேவையில்லை என்பதும் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரை தொடா்ந்து ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச மன்றங்களில் எழுப்பி அதைப் பிரச்னையாக்குவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.