அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை 1.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ள நிலையில், நூலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அந்த நூலகத்தில் பரவியுள்ள தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை.
மேலும், இதுகுறித்து நாஷ்வில் தீயணைப்பு துறையும், இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிக்க: அதிகாலையிலேயே உக்ரைன் நகரங்களைத் தாக்கிய ரஷியா! 2 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொல்லங்கோடு: கிணற்றில் தவறி விழுந்த மாணவி மீட்பு

பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து: 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!

குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து! அணைக்கப் போராடும் தீயணைப்புத்துறையினர்!
கரூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 12 மணிநேரமாக நீடிக்கும் தீயணைப்புப் பணி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



