தென் ஆப்பிரிக்கா நாட்டில் மாயமான, சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தின் மீது பறந்த சிறிய ரக விமானம், கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாயமானது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் சார்பில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதுகுறித்து, குவாசுலு-நடால் மாகாண அதிகாரிகள் நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில், விர்ஜீனியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் அதன் இலக்கை அடையவில்லை எனவும் லேடிசிமித் பகுதிக்கு அருகில் அதன் தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், அந்தச் சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதை உறுதி செய்துள்ளதாக, அம்மாகாண அதிகாரிகள் இன்று (ஜூன் 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்க வானிலை நிலையம், குவாசுலு-நடால் மாகாணத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டக் கூடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: ஒருவர் பலி
லண்டன் - சென்னை விமானத்தில் மோதிய பறவை! 236 போ் உயிா் தப்பினர்!

பஹாமாஸில் விமான விபத்து

பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்து
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



