சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: ஒருவர் பலி

வடக்கு ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விபத்து பற்றி...

Small plane crashes into home in northern Germany, leaving 1 dead, 1 missing

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம். - Photo: AP

Published On :

வடக்கு ஜெர்மனியில் வீட்டில் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் பலியானார்.

வடக்கு ஜெர்மனியில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி சனிக்கிழமை விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் மற்றொருவர் காணாமல் போனதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லோயர் சாக்சனி மாகாணத்தின் கேண்டர்கெசீ பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில், ஒற்றைக் குடும்பம் வசிக்கும் வீட்டு கூரையின் மீது அந்தச் சிறிய ரக விமானம் மோதியதாக ஓல்டன்பர்க் நகரக் போலீஸார் கூறினர்.

விமானத்தில் இருவர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் பலியானதாகவும், காணாமல் போன மற்றொரு நபரை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் 'டிபிஏ' செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வீட்டில் வசிப்பவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, அந்த வீடு அமைந்துள்ள சாலை முழுவதும் தற்காலிகமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

Summary

At least one person died and a second one appeared to be missing after a small plane crashed into a home in northern Germany on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.