தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

28.6.1976: 226 பேருடன் பிரான்ஸ் விமானம் கடத்தப்பட்டது

226 பேருடன் பிரான்ஸ் விமானம் கடத்தப்பட்டது பற்றி...

News image

28.6.1976 - Dinamani

Updated On :28 ஜூன் 2026, 4:10 am IST

டெல்அவிவ், ஜூன். 27- 'ஏர் பிரான்ஸ்’ விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று இன்று லிபியாவில் உள்ள பெங்காஜி என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டது.

ஏதென்ஸ் நகரிலிருந்து பாரிஸுக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் கடத்தப்பட்டது என்று ஏர் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இன்று பிற்பகல் 1-30 மணிக்கு (இந்திய நேரப்புடி மாலை 7-00 மணிக்கு) விமானம் பெங்காஜி விமான நிலையத்தில் இறங்கியது.

இரண்டு என்ஜின் உள்ள ஜெட் விமானம் இது. இஸ்ரேலில் உள்ள லிட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏதென்ஸ் வழியாகப் பாரிஸுக்கு வந்து கொண்டிருந்தது.

மொத்தம் இதில் 264 பயணிகள் இருந்தார்கள். அவர்களில் 83 பேர் இஸ்ரேலியர்கள். ஆனால் ஏதென்ஸில் 38 பேர் இறங்கிவிட்டார்கள். அவர்களில் இஸ்ரேலியர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.

6 பாலஸ்தீனியர் கடத்தினர்

பெங்காஜி விமான நிலையத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, விமானம் அங்கு போய் இறங்கி விட்டது என்பதைத் தொலைபேசி மூலம் இன்று உறுதிப்படுத்தினார்.

6 பாலஸ்தீனியர்கள் விமானத்தைக் கடத்தி வந்ததாக அவர் சொன்னார். கடத்தல்காரர்களும் 200-க்கு மேற்பட்ட பிரயாணிகளும் இன்னும் விமானத்திலேயே இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மத்ய ஊழியர் பென்ஷனை நிர்ணயிக்க புது ஏற்பாடு

புது டில்லி, ஜூன் 27- மத்திய அரசின் ஊழியர்களின் பென்ஷன்களை நிர்ணயிப்பதற்கும், பென்ஷன்களை பட்டுவாடா செய்வதற்கும் புதிய நடைமுறைகளை மத்திய நிதி அமைச்சகம் வகுத்திருக்கிறது. இப்போது பென்ஷன் பெறுவோரும், இனிமேல் பென்ஷன் பெறக்கூடியவர்களும் புதிய நடைமுறைகளினால் பயனடைவார்கள் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.

தற்போது, பென்ஷன் பெறுவோர் அரசாங்க கஜானாக்களுக்கு சென்று, கியூ வரிசையில் நின்று பென்ஷனைப் பெற வேண்டி உள்ளது. தாங்கள் செல்லும் தினத்தன்று பென்ஷன் கிடைக்கும் என்ற நிச்சயமும் அவர்களுக்கு இருப்பதில்லை.

இனிமேல் பென்ஷன் பெறுவோர் அரசாங்க கஜானாக்களுக்கு சென்று சிரமப்பட வேண்டியதில்லை. சென்னை, பம்பாய், டில்லி, கல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், லட்சுமணபுரி ஆகிய ஏழு பிரதான நகரங்களில் அரசு பாங்குகளின் எல்லாக் கிளைகளின் மூலமாகவும் பென்ஷன் தொகைகள் பட்டுவாடா செய்யப்படும்.

பென்ஷன் தொகைகள் வழங்கப்படும் இடங்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உள்ளது. இது 1700 ஆக அதிகரிக்கும். ...

Summary

28.6.1976: French plane hijacked with 226 people on board.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.