காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜெர்மனியில் சரக்கு ரயில்கள் மோதல்: ஒருவர் பலி

ஜெர்மனியில் சரக்கு ரயில்கள் பாலத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினர்.

Freight trains' collision in Germany sends 2 wagons plunging off bridge, one killed

விபத்துக்குள்ளான ரயில்கள். - AP

Published On :

ஜெர்மனியில் சரக்கு ரயில்கள் பாலத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினர்.

ஜெர்மனியின் முனிச் நகரில் இரண்டு சரக்கு ரயில்கள் ரயில்வே பாலத்தின் மீது நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அதன் இரண்டு பெட்டிகள் பாலத்திலிருந்து கீழே உள்ள தெருவில் விழுந்தன.

மேலும் விபத்தில் ஒருவர் பலியானார். எனினும், விபத்தில் பலியானவர் குறித்த விவரங்களை ஜெர்மன் செய்தி நிறுவனமான டிபிஏ வெளியிடவில்லை.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பாலத்தின் கீழே உள்ள தெரு மூடப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் அப்பகுதியைத் தவிர்க்குமாறும் முனிச் போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தடம்புரண்ட பெட்டிகளில் சரக்கு எதுவும் இல்லை என்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

Summary

Two freight trains collided on a railway bridge in Germany overnight, officials said Saturday, sending two wagons plunging off the bridge and onto the street below. One person was killed in the crash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.