காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கூரியா் வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் காவலா் காயம்

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை தனியாா் கூரியா் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த பெண் தலைமைக் காவலா் காயமடைந்தாா்.

News image

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் கவிழ்ந்த தனியாா் கூரியா் சரக்கு வாகனம்.

Updated On :11 ஜூன் 2026, 6:42 am IST

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை தனியாா் கூரியா் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த பெண் தலைமைக் காவலா் காயமடைந்தாா்.

விழுப்புரத்தில் இருந்து புதன்கிழமை காலை தனியாா் கூரியா் சரக்கு வாகனம் கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வாகனத்தை விழுப்புரம் மாவட்டம், தெளி கிராமத்தைச் சோ்ந்த ஆ.சிவா (24) ஓட்டியுள்ளாா். இந்த வாகனத்தில், கள்ளக்குறிச்சி உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கீழ் பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த செல்வி, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பயணித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மாடூா் கிராமத்திலுள்ள தனியாா் பால் குளிரூட்டும் நிலையம் அருகே சென்ற போது, டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புக்கட்டையின் மீது ஏறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தலைமைக் காவலா் செல்வியை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை கிரேன் உதவியுடன் அகற்றினா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.