இஸ்ரேல் உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் மீது ஹமாஸ் தாக்குதல்! 50 பேர் பலி!

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காஸாவில் கடந்த சில மாதங்களில், ஹமாஸ் படையின் தாக்குதலில், இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய, யாசர் அபு ஷாபாப் என்பவரின் தலைமையிலான தீவிரவாதக் குழுவுக்கும், ஹமாஸ் கிளர்ச்சிப்படையினருக்கும் இடையில் நேற்று (ஜூன் 10) மோதல் வெடித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், யாசர் அபு ஷாபாப்பை, பாதுகாக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ஆதரவுப்பெற்ற அபு ஷாபாப் தலைமையிலான, பாப்புலர் ஃபோர்ஸஸ் என்றழைக்கப்படும், அந்தக் குழு நேற்று (ஜூன் 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

”நிவாரணப் படைகளுக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட, எங்களது தலைவர் யாசரின் உறவினர்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர்களை ஹமாஸ் படையினர் கொன்றுள்ளனர். மேலும், அப்பகுதியிலிருந்த வெடிப் பொருள்களின் எச்சங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோதும், நாங்கள் சில உறுப்பினர்களை இழந்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக, அபு ஷாபாப் கைது செய்யப்பட்டு காஸாவில் ஹமாஸ் படையின் கட்டுப்பாட்டிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலின்போது, அவர் சிறையிலிருந்து தப்பித்துள்ளார்.

தற்போது, இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற அவரது குழுவில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து, கிழக்கு ரஃபா பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் ஏஜெண்டு என்றழைக்கப்படும் அபு ஷாபாப், ”காஸாவின் துரோகி” என்றும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும், இவரைக் கொல்வதற்கான தங்களது நோக்கத்தை ஹமாஸ் படை பொதுவெளியில் அறிவித்துள்ளது.

இத்துடன், அபு ஷாபாப்பின் படைக்கு, இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதன் மூலம், காஸாவில் அவர்களுக்கும், ஹமாஸ் படைக்கும் இடையில் உள் நாட்டுப் போர் துவங்கும் அபாயமுள்ளதாக இஸ்ரேலிய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானியர்! ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com