
ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரானின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேவையில்லாமல் இருப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டாம், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.