உச்சகட்டத்தை எட்டும் இஸ்ரேல் - ஈரான் மோதல்!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் பற்றிய நேரலை செய்திகள்...
Israel - Iran conflict
இஸ்ரேல் - ஈரான் மோதல் AP

பரஸ்பரம் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் 4-வது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.

இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் தெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. மேலும் படிக்க...

ஜி7 மாநாட்டில் இருந்து வெளியேறிய டிரம்ப்

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த டிரம்ப், பாதியிலேயே வெளியேறி வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

தெஹ்ரானைவிட்டு வெளியேறுக!

ஈரான் தலைநகர் தெஹ்ரானைவிட்டு அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பதற்றமாக சூழல் நிலவுகிறது.

பங்கர் - பஸ்டர் குண்டுகள் மூலம் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கி அமெரிக்கா அழிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க...

இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இந்தியர்கள் அனைவரும் அந்நகரத்தை விட்டு வெளியேற, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்களின் சேவைக்காக 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரகால எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் படிக்க...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com