மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
விண்வெளி செல்லும் குழுவினருடன் சுபான்ஷு சுக்லா (இடமிருந்து 3-வது..)
விண்வெளி செல்லும் குழுவினருடன் சுபான்ஷு சுக்லா (இடமிருந்து 3-வது..)
Updated on
1 min read

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவரான சுபான்ஷு சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

கடந்த மே 29-ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபல்கான் 9 ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் இவா்கள் பயணிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஒத்திவைக்கப்பட்ட ‘ஆக்ஸிம்-4’ திட்டம், ஃபால்கள் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதை அடுத்து மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரர் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.

முன்னதாக, ஜூன் 8, ஜூன் 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதைப் போலவே, மீண்டும் 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வானிலை மாற்றம், வீரர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸிம்-4 பயணம் வருகிற ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com