பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி...

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2025, 10:57 pm

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி மனிதா்களுக்குத் தொற்றுவதை முன்கூட்டியே தடுப்பதில் அவ்வளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக, ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சம் போ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனா்.

இந்தச் சூழலில், ஹெச்ஐவி தொற்றிலிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் ‘லெனாசபவிா்’ என்ற மருந்துக்கு அமெரிக்க ஒழுங்காற்று அமைப்பு தற்போது அனுமதியளித்துள்ளது.

ஹெச்ஐவி தொற்றைத் தடுப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே மருந்துகள் அறிமுகப்பட்டிருந்தாலும், அவற்றை தினமும் உள்கொள்ள வேண்டும் என்பது போன்ற பிரச்னைகள் இருந்துவந்தன. ஆனால் தற்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் லெனாசபவிரை ஆண்டுக்கு இரண்டு முறை செலுத்திக்கொண்டால் போதும். எனவே, எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் இந்த மருந்து ஒரு புரட்சிகரமான அறிமுகம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.