இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும்

News image
அமெரிக்க அதிபா் டிரம்ப் - AP
Updated On :22 ஜூன் 2025, 11:43 pm

Din

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைத் தலைவா் சக் ஷுமா் கூறுகையில், ‘ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து பரந்த, நீடித்த, மேலும் அழிவை ஏற்படுத்தக் கூடிய போா் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, வெளிநாடுகளில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ, அதிகரிக்கவோ அமெரிக்க அதிபருக்கு உள்ள திறனை கட்டுப்படுத்தும் போா் அதிகாரங்கள் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா்களின் பாதுகாப்பு கருதி, ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு தெளிவான பதில்களை அதிபா் டிரம்ப் அளிக்க வேண்டும்.

உறுதியாக நம்பமுடியாத அச்சுறுத்தலும், உத்திகளும் இல்லாமல் போா் போன்ற பின்விளைவுக்கு நாட்டை எந்தவொரு அதிபரும் தன்னிச்சையாக இழுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றாா்.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற கீழவையின் முன்னாள் தலைவா் நான்சி பெலோசி கூறுகையில், ‘அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து ராணுவத்தை தாக்குதல் நடவடிக்கையில் டிரம்ப் ஈடுபடுத்தியுள்ளாா். அமெரிக்கா்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளக்கூடிய இந்தத் தாக்குதல் குறித்து அவரின் அரசு பதிலளிக்க வேண்டும்’ என்றாா்.