ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டது.
மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான், ரஷியா கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தது.
இதனிடையே இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இதை மறுக்கும் விதமாக இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 12 நாள்களாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்து, போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருங்கிணைப்புடன் இஸ்ரேல் - ஈரான் என இருதரப்பிலும் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவு அளித்ததற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் பங்கேற்றதற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி ” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


