நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் மனு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

தாஹாவூர் ராணாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி..

News image

தஹாவூர் ராணா

Updated On :7 மார்ச் 2025, 3:42 am

DIN

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் அவா் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவையே உலுக்கிய 2008 மும்பை தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இதில் மூளையாக செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.

கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணா, மும்பை தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவினாா்; ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் போா்வையில்தான், மும்பையில் உளவு - திட்டமிடல் நடவடிக்கைகளில் ஹெட்லி ஈடுபட்டாா். ராணாவுக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடா்புள்ளது.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி இதற்கு அனுமதி வழங்கியது. இந்த நாடுகடத்தல் விரைவில் நடைபெறும் என அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் தஹாவூா் ராணா சாா்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்னை நாடு கடத்துவது என்பது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் என்னை இந்தியாவில் கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், எனக்கு தீவிரமான உடல்நலப் பிரச்னைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரானது என்று கூறியிருந்தார்.

அவசர வழக்காக வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எலினா ககன், மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இறுதி முயற்சியாக தலைமை நீதிபதி ராபர்டிடம் மேல்முறையீடு மனுவை ராணாவின் சட்டக் குழுவினர் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.