இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

AP

Published On :

ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ கடந்து விட்டதாக சிரியா உள்நாட்டுப் போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது.

சிரியாவில் கடந்த ஆண்டு இறுதியில் அரசுப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை 2024 டிசம்பா் 8-ஆம் தேதி கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

அதையடுத்து, ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா அந்த நாட்டின் இடைக்கால அதிபராக கடந்த ஜனவரி 30-இல் அறிவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சிரியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் புதிய அரசின் படையினருக்கும் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் புதிய அரசின் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமாா் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.