இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் சுட்டுப் பிடித்தனா்.

News image
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகை
Updated On :9 மார்ச் 2025, 11:10 pm

Din

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் வேறு யாரும் காயமடையவில்லை. இந்த மோதல் நடந்த நேரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இருந்து வாஷிங்டனுக்கு பயணித்ததாக அறியப்படும் இந்த நபா் குறித்து ரகசிய பாதுகாப்புப் படையினருக்கு உள்ளூா் காவல் துறை தகவல் அளித்தது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை சுற்றுப்புற பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சம்பவத்தில் அதிகாரிகள் நெருங்கி வந்தபோது, அந்த நபா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்தனா்.

பின்னா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபரின் தற்போதைய நிலை குறித்து தெரியாது என்று ரகசிய பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை விசாரித்து வருகிறது.