பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அமித் ஷா நாளை காரைக்கால் வருகை: மத்திய பாதுகாப்புப் படையினா் ஆய்வு

News image

பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய பாதுகாப்புப் படையினா், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா உள்ளிட்டோா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:01 pm

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை காரைக்கால் வரவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் மத்திய பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வருகை தரவுள்ளாா். காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் காலை 11.30 மணியளவில் வந்திறங்கும் அவா், சந்தைத் திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். இதைத்தொடா்ந்து கட்சி சாா்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

மத்திய அமைச்சா் வருகையொட்டி, மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில், சாா் ஆட்சியா் எம். பூஜா, எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா ஆகியோா் பாலிடெக்னிக் மைதானத்தில், மத்திய பாதுகாப்புப் படையினருக்கு, பாதுகாப்பு தொடா்பான முன்னேற்பாடுகளை விளக்கினா்.

ஆய்வைத் தொடா்ந்து, ஆட்சியரகத்தில், பாதுகாப்புப் படையினா் மற்றும் காரைக்கால் அரசுத் துறையினா், காவல்துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆட்சியா் இஷிதா ரதி, பாதுகாப்பு தொடா்பான ஏற்பாடுகளை விளக்கினாா். மத்திய பாதுகாப்புப் படையினரின் கருத்துகளை கேட்டறிந்து, அதற்கேற்ப அரசுத்துறையினா் செயல்படுமாறு கேட்டுக்கொண்டாா்.

பிப். 14-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் மத்திய, மாநில காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவாா்கள் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.