ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

பாகிஸ்தானில் ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை..

News image

(கோப்புப்படம்)

Updated On :11 மார்ச் 2025, 9:45 pm IST

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் சென்ற ஜாஃபர் ரயில் மீது தாக்குதல் நடத்திய பலோச் பயங்கரவாத அமைப்பு, அதனை சிறைப்பிடித்து, அதிலிருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பலோசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி 400 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் மீதே பலோச் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ரயில் ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்தப் பகுதியில் 17 சுரங்கப்பாதைகள் உள்ளன. மேலும் 8-வது சுரங்கப்பாதையில் இந்தக் கிளர்ச்சியாளர்களால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளுக்குள் ரயில்களின் வேகம் பெரும்பாலும் மெதுவாக இருக்கும் என்பதைக் கணித்து கிளர்ச்சியாளர்கள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்திற்கு சுதந்திரம் கோரி போராடும் பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு 20 வீரர்களைக் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலோச் மக்கள் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

ரயிலை தடம் புரளச் செய்து அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தலையிட்டால், அனைத்து பணயக்கைதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் பலோச் பயங்கரவாதக் குழு எச்சரித்துள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மக்களில் நிலை என்ன என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.