மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார்.

டிராகன் விண்கலத்தில் சென்றுள்ள க்ரீயூவ்-10 குழுவினர் - @SpaceX

Published On :

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார்.

சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

கோளாறு சரிசெய்யப்பட்ட சரிசெய்யப்பட்டதையடுத்து, ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி சனிக்கிழமை (மாா்ச் 15) அதிகாலை 5 மணியளவில் ஃபால்கன் 9 வாயிலாக டிராகன் விண்கலம் செலுத்தப்பட்டது. சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர புறப்பட்ட ஃபால்கான் 9 டிராகன் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷியாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் புறப்பட்டுள்ளனர்.

டிராகன் விண்கலத்தில் சென்றுள்ள க்ரீயூவ்-10 குழுவினர் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 9 மணிக்கு சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடைவர்.

இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷிய வின்வெளி வீரர்கள் இருவருடன் சேர்ந்து மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ கால தாமதம் ஏற்படவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.