ரஷியா -உக்ரைன் போர்: டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசிய புதின்!

ரஷியா -உக்ரைன் போர்: டிரம்ப்புடன் புதின் தொலைபேசியில் பேச்சு..
டிரம்புடன் புதின்...
டிரம்புடன் புதின்...
Published on
Updated on
1 min read

ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அதிபர் அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது. அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

இதையும் படிக்க: காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 30 நாள் போர்நிறுத்த திட்டத்தில் கையெழுத்திட ரஷிய அதிபர் புதினை வற்புறுத்த அமெரிக்க நிர்வாகம் முயற்சித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷிய அதிபர் விளாதீமிர் புதினும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

எனவே அமெரிக்காவின் நீண்ட முயற்சிக்குப்பின் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரஷியாவையும் இந்த போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க வைக்க டிரம்ப் முயன்று வருகிறார். இதற்காக உயர்நிலைக்குழு ஒன்றையும் அவர் ரஷியாவுக்கு அனுப்பி வைத்தார். இதில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ரஷிய அதிபர் புதினுடன், டிரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுபற்றி வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் டான் ஸ்கேவினோவின் கூறுகையில், அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த தொலைபேசி பேச்சுவார்த்தை அழைப்பு நன்றாக சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க தரப்பு முன்மொழிந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக டிரம்பிடம் புதின் உறுதியளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷியாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் அமலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com