அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யை விமர்சித்த மூத்த ஏஜெண்ட் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
15 ஆண்டுகளாக எஃப்பிஐயில் பணிபுரிந்து வருபவர் ஜோனாதன் பூமா. இவர், சில வழக்குகளை எஃப்பிஐ கையாண்ட விதம் குறித்து சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
இதையும் படிக்க : அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் டிரம்ப்!
இந்த நிலையில், எஃப்பிஐயின் ரகசிய ஆவணங்களை அச்சிட்டு எதிரிகளுக்கு அளித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பூமாவை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக காத்திருந்த பூமாவை திங்கள்கிழமை கைது செய்தனர்.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு பூமாவை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






