
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகெய்ங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ தொலைவில் மதியம் 12.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
பூமியின் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டு 12 நிமிடங்களில் சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றபோது மசூதி இடிந்து விழுந்ததால் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மியான்மர் ராணுவ அரசின் தலைவர் வெள்ளிக்கிழமை மாலை தொலைக்காட்சி உரையில், நிலநடுக்கத்துக்கு இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 800 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.
இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.