அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

61 வயதான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தகவல்
காதலி லாரன் சான்ச்சேஸுடன் ஜெப் பெசோஸ்
காதலி லாரன் சான்ச்சேஸுடன் ஜெப் பெசோஸ்Instagram | Jeff Bezos
Published on
Updated on
1 min read

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும் (61) அவரது காதலியான லாரன் சான்ச்சேஸுக்கும் (55) ஜூன் மாதம் 26 முதல் 29 தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, இவர்களின் நிச்சயதார்த்தத்தின்போது லாரனுக்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான மோதிரத்தை ஜெப் பெசோஸ் பரிசாக வழங்கினார்.

இவர்களின் திருமணம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் ஒரு சொகுசு கப்பலில் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து, விருந்தினர்களுக்காக கிரிட்டி பேலஸ் மற்றும் அமன் வெனிஸ் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்களின் ஓர் அறையின் ஓர் இரவுக்கு மட்டும் 3,200 டாலர் (ரூ. 2.7 லட்சம்) கட்டணமாக வசூலிக்கப்படும். அதனைவிட உயர்தர வகுப்பு அறைகள் 10 மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இவான்கா டிரம்ப், ஜோர்டான் ராணி ரனியா, தொழிலதிபர் பில்கேட்ஸ், நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ முதலான முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மேக்கென்ஸி ஸ்காட்டை விவாகரத்து செய்த 2019 ஆம் ஆண்டிலேயே லாரனுடன் காதலில் இருப்பதாக ஜெப் பெசோஸ் கூறினார். ஜெப் பெசோஸுக்கும் மேக்கென்ஸிக்கும் 4 குழந்தைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com