படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

அகதிகள் படகு கவிழ்ந்து இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!

அமெரிக்காவில் அகதிகள் படகு கவிழ்ந்து 14 வயது இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலியானதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே 5 ஆம் தேதியன்று அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், மெக்ஸிகோவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதில், பலியான அந்த இந்திய சிறுவனின் 10 வயது தங்கை மாயமாகியுள்ளதாகவும் அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்டபோது அந்தப் படகில் பயணித்தவர்களில் 9 பேர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில் 10 வயது சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் அமெரிக்க கடலோரக் காவல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மெக்ஸிகோவின் எல்லையிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் சிறிய ரக மீன்பிடி படகில் பயணித்த போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த கடற்கரையில் அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் அழைத்து வர முயன்ற 2 மெக்ஸிகோ நாட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரின் மீதும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் குற்றத்திற்காக அவர்களுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், அகதிகள் அனைவரும் கரைக்கு வந்தடைந்த பின்னர் அவர்களை அழைத்துச் செல்லக் காத்திருந்த மூன்று வாகன ஓட்டிகளும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் மீதும் அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ல் சாண்டியாகோ கடற்கரையில் அகதிகள் பயணித்த படகு, அங்கு நிலவிய கடும் பனி மூட்டத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.