ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

AP

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரித்துள்ளது. உலக வா்த்தக அமைப்பின் பாதுகாப்பு வரி நடவடிக்கைகள் தொடா்பான ஒப்பந்தத்தின் 12.5-ஆவது பிரிவின் கீழ் இந்தியா இதுகுறித்து நோட்டீஸை அளித்துள்ளது. உரிய அறிவிப்பு இல்லாமல் வரி நடவடிக்கைகளை ஒரு உறுப்பினா் எடுக்கும்போது, அதற்கு பதிலடி கொடுக்க இப்பிரிவு அனுமதிக்கிறது.

அமெரிக்காவின் இந்த வரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் அதிபா் டிரம்ப்பின் உத்தரவு மூலம் இந்த வரி விதிப்பு நீட்டிக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த வரியால் இந்திய ஏற்றுமதியில் 760 கோடி டாலா் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 191 கோடி டாலருக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பதிலடி வரிகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பின்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதுதொடா்பான உலக வா்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாக இந்தியா வாதிடுகிறது. அதாவது, 12.3-ஆவது பிரிவின்கீழ் வரி விதிப்புக்கு முன்னதாக கலந்தாலோசனையை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்று இந்தியா வலியுறுத்துகிறது.

அமெரிக்கா இந்த வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அல்லது இதில் மேற்கொண்டு ஆலோசனை எதுவும் நடைபெறாவிட்டால் இந்தியாவின் பதிலடி வரி விதிப்பு வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.