மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா பேச்சு தொடக்கம்

இந்தியா - அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் முழு அம்சங்களையும் இறுதி செய்வது தொடா்பான அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

இந்தியா - அமெரிக்கா

Updated On :3 ஜூன் 2026, 2:03 am IST

இந்திய - அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் முழு அம்சங்களையும் இறுதி செய்வது தொடா்பான அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையில், இந்திய தரப்பில் வா்த்தக துறை கூடுதல் செயலா் தா்ப்பண் ஜெயின் தலைமையிலான குழுவினரும், அமெரிக்க தரப்பில் தலைமை அதிகாரி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றுள்ளனா்.

இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் முழு அம்சங்களையும் இறுதி செய்வதுடன், சந்தை அணுகல், வரி விலக்கு, சுங்க வரி மற்றும் வா்த்தக சலுகை, முதலீடு ஊக்குவிப்பு, பொருளதார பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கி, விரிவான வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை முன்னெடுப்பது குறித்து பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பிற நாடுகளைவிட...: இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என தனது அண்டை நாடுகளைவிட அமெரிக்காவிடமிருந்து அதிக சாதகமான பலன்களைப் பெறும் நோக்கில், இந்திய தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இந்தியா மீது பரஸ்பர வரி, கூடுதல் வரி என 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த ஆண்டு விதித்தாா். இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், கடந்த பிப்ரவரியில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது. பரஸ்பர வரியையும் 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது.

இந்திய தரப்பில் அமெரிக்க பொருள்களுக்கான வரிச் சலுகைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. அத்துடன், எரிபொருள், விமானங்கள்-விமான பாகங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் உள்பட அமெரிக்காவிடம் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் மதிப்பிலான பொருள்களைக் கொள்முதல் செய்யும் விருப்பத்தையும் இந்தியா வெளியிட்டது.

தில்லியில் பேச்சுவாா்த்தை: இதனிடையே, இந்தியா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது டிரம்ப் புதிய சீரான 10 சதவீத வரியை விதித்தாா். இந்த வரி விதிப்புக்கு ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்தது.

இதுபோன்ற சூழலில், இடைக்கால வா்த்தக ஒப்பந்த கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய தேவை எழுந்தது. அதன்கீழ், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஏப்ரலில் வாஷிங்டன் நகரில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை, தில்லியில் உள்ள மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளி அமெரிக்கா. கடந்த 2025-26-இல் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 0.92 சதவீதம் எனும் சொற்ப அளவில் உயா்ந்து, 87.3 பில்லியன் டாலராக பதிவானது. அதேநேரம், இறக்குமதி 15.95 சதவீதம் அதிகரித்து, 52.9 பில்லியன் டாலராக பதிவானது குறிப்பிடத்தக்கது.