பாகிஸ்தான் விமான தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை: ஷாபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் விமான ஏவு தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை என்று அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (கோப்புப் படம்)
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (கோப்புப் படம்)ENS
Published on
Updated on
1 min read

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தானின் ராணுவம் இந்தியாவுக்கு திறம்பட தக்க பதிலடி கொடுத்துள்ளதன் மூலம், பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றில் ஒரு பொன்னான சகாப்தத்தை எழுதியுள்ளது என்று கூறியிருந்தார்.

ஆனால் அதற்கு முன் பேசிய அவர், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது பாகிஸ்தான் விமான ஏவு தளத்தை மே 10ஆம் தேதி இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை என்று அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தானின் நூர் கான் விமானப் படைத் தளம் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ ஜெனரலிடமிருந்து தனக்கு அவசர செய்தி வந்ததாக, அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் விமானப் படைத் தளம் மீது இந்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மே 9 - 10ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிர் தன்னை தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது, நடந்து வரும் சண்டை குறித்த நிலவரங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், இந்திய ஏவுகணைகள், நுர் கான் விமானப் படை ஏவுதளத்தை தாக்கியிருப்பதாகவும், இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் விமானப் படையின், மிக முக்கிய ஏவுதளமாக, நுர் கான் விமான ஏவுதளம் அமைந்திருந்ததாகவும், இது இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டியில் சக்லாலா என்ற இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் எல்லைக் கண்காணிப்பு, போக்குவரத்து, விமானப் படை விமானங்களின் புறப்பாடு மற்றும் முக்கியத் தலைவர்களின் போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விமானப் படையின் நுர் கான் ஏவுதளம் அடிப்படையாக இருந்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தானின் ராணுவம் இந்தியாவுக்கு திறம்பட தக்க பதிலடி கொடுத்துள்ளதன் மூலம், பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றில் ஒரு பொன்னான சகாப்தத்தை எழுதியுள்ளது என்று கூறியிருந்தார்.

ஆனால் அதற்கு முன் பேசிய அவர், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com