செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

கோல்டன் டோம் பாதுகாப்பு.. டிரம்பின் அழைப்பை நிராகரித்தது கனடா!

அமெரிக்காவுடன் இணைந்தால் இலவசமாகவே கோல்டன் டோம் பாதுகாப்பு என்ற டிரம்பின் அழைப்பை நிராகரித்தது கனடா.

கனடா பிரதமர் மார்க் கார்னி - AP

Updated On :

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணையும்பட்சத்தில், கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு இலவசமாகவே பெறலாம் என்று அதிபர் டிரம்ப் விடுத்தக் கோரிக்கையை கனடா நிராகரித்துவிட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை, கனடா பிரதமர் மார்க் கார்னி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

கனடா, ஒரு பெருமைமிக்க, சுதந்திர நாடு. அதன் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை என்று கனடா நாட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிமுகப்படுத்திய கோல்டன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை சுதந்திர நாடாகவே இருந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், கனடாவுக்கு 61 பில்லியன் டாலர்கள் ஆகும். அல்லது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைந்துகொண்டால், இந்த பாதுகாப்பு அமைப்பு முழுக்க இலவசமாகவே கிடைத்துவிடும்.

டிரம்ப் அழைப்பு - கனடா நிராகரிப்பு

டிரம்ப் அழைப்பு - கனடா நிராகரிப்பு - AP

அமெரிக்கா, அதிநவீன உலகில் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ’கோல்டன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு திட்டத்தை டிரம்ப் வெளியிட்டிருந்தார். உலகின் எங்கிருந்தும், ஏன் விண்வெளியிலிருந்து கூட அமெரிக்காவைத் தாக்க முடியாத வகையில் இந்த கோல்டன் டோம், 175 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்பட உள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைபப்னது இன்னும் மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில்தான், கோல்டன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு பிரசாரம் செய்வது போல, டிரம்ப் விடுத்த அழைப்பில், ஒருவேளை, இந்த கோல்டன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பைக் கனடா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், பணம் செலுத்த வேண்டும், அல்லது அமெரிக்காவின் அங்கமாக மாறிவிட்டால் அதற்கு இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இலவசமாகவே கிடைத்துவிடும் என்று கூறியிருந்தார்.

கடந்தகாலங்களில், பாதுகாப்பு அமைப்புக்குக் கனடா செலவிட்டத் தொகை குறித்து விமர்சித்திருக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுடன் இணைவதன் மூலம், கனடா தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.