ஹாலிவுட் நடிகை குளித்த நீரில் தயாரித்த சோப் ரூ.700-க்கு விற்பனை!
ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்புகள் அறிமுகம்


ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து புதிய சோப் வகையை உருவாக்கியுள்ளனர். பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன் சிட்னி குளித்த நீர்த்துளிகளையும் சேர்த்து புதிய சோப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை அமெரிக்க மதிப்பில் 8 டாலராக (இந்திய மதிப்பில் ரூ. 684) நிர்ணயித்துள்ளனர்.
மிகவும் குறைந்தளவிலாக 5,000 எண்ணிக்கையில் மட்டுமே இந்த சோப் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஜூன் 4 ஆம் தேதிக்குள்ளாக, நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு இலவசமாக பரிசளிப்பதாகவும் டாக்டர் ஸ்குவாட்ச் தெரிவித்துள்ளது.
நடிகை சிட்னி ஸ்வீனிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரின் இந்த முயற்சி எப்படி இருக்கப் போகிறது என்று சமூக ஊடகங்களில் இணையவாசிகள் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...