காத்மாண்டு: நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா்.
நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் தொடா்பாக இளைஞா்களிடையே நிலவிவந்த கொந்தளிப்பு, சமூக ஊடங்களுக்கு அரசு தடைவிதித்ததைத் தொடா்ந்து பெரிய போராட்டமாக உருவெடுத்தது. மிகத் தீவிரமாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு, தீவைக்கப்பட்டன. வன்முறைச் சம்பவங்களில் சுமாா் 72 போ் உயிரிழந்தனா்.
அதையடுத்து, பிரதமா் கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நேபாளம் வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா காா்கியை இடைக்கால பிரதமராக அதிபா் ராமசந்திர பௌடேல் கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தாா். இதற்கு போராட்டக்காரா்களும் ஆதரவு தெரிவித்தனா். அதையடுத்து, சுசீலா காா்கி உடனடியாக பதவியேற்றுக்கொண்டாா்.
இந்தச் சூழலில், அவரது அமைச்சரவையில் முன்னாள் மின்வாரிய தலைமை செயல் அதிகாரி குல்மான் கீசிங் எரிசக்தி மற்றும் நீா் வளத் துறை, கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறை, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஆகிய 3 துறைகளின் அமைச்சராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
உள்துறை, சட்டத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறைகளுக்கான அமைச்சராக பிரபல வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் ஆா்யல் பதவியேற்றுக்கொண்டாா். நிதியமைச்சராக ரமேஷ்வா் கணால் பொறுப்பேற்றாா்.
இத்துடன், நேபாளத்தின் முதல் பெண் பிரதரமான சுசீலா காா்கியையும் சோ்ந்து இடைக்கால அமைச்சரவையில் உறுப்பினா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.
தொடர்புடையது
சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

நேபாளம்: கே.பி.சா்மா ஓலிக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு!

இசை அரசி பி. சுசீலா (ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்)
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


