ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம்! -டிரம்ப்

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு இந்தியாவும் சீனாவும் காரணம் என டிரம்ப் பேசியது குறித்து...
அதிபர் டொனால்ட் டிரம்ப்
அதிபர் டொனால்ட் டிரம்ப்ஏபி
Published on
Updated on
1 min read

ரஷியாவிலிருந்து தொடர்ந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு இந்தியாவும் சீனாவும் முதன்மை நிதியாளர்களாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவையும் சீனாவையும் குற்றம்சாட்டியுள்ள அவர், ரஷியாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை ஐரோப்பிய நாடுகளும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டம் நியூயார்க் நகரில் இன்று (செப். 23) நடைபெற்றது. இதில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கிறார்.

இதில், எல்லை ஊடுருவல், சட்டவிரோத குடியேற்றம், உக்ரைன் போர் ஆகியவை குறித்து டிரம்ப் பேசியதாவது,

''உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் போருக்கு முதன்மை நிதியாளர்களாக சீனாவும் இந்தியாவும் உள்ளனர். அவர்கள் ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்து தொடர்ந்து வணிகம் மேற்கொள்வதால் ரஷியாவுக்கு மறைமுகமாக நிதியளித்து உதவுகின்றன.

ஆனால், மன்னிக்க முடியாத வகையில், நேட்டோ நாடுகள் கூட ரஷிய எரிசக்தி மற்றும் எரிசக்தி தயாரிப்புகளுடனான வணிகத்தை பெரும்பாலும் துண்டிக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால், நாம் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று பொருள்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள ரஷியா தயாராக இல்லை என்றால், மிகவும் வலுவான வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. ஐரோப்பிய நாட்டினர் அனைவரும் இப்போது இங்கே கூடியிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போரை விரைவாக நிறுத்தும் என நம்புகிறேன்.

திறந்தவெளி எல்லை என்பது தோல்வியுற்ற சோதனைகளாக உள்ளது. மேற்கு நாடுகளில் புலம்பெயர்வு செய்பவர்கள் நரகத்திற்குச் செல்லவுள்ளனர். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான வேகம் ஹமாஸுக்கான வெகுமதி'' எனத் தெரிவித்தார்.

உலகில் அதிகம் துன்பத்திற்குள்ளாகும் மதமாக கிறிஸ்தவம் மாறி வருவதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட டிரம்ப், இன்று உலகில் அதிகம் துன்புறுத்தப்படும் மதம் உள்பட பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

Summary

India, China primary funders of Ukraine war The Donald Trump show comes to UN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com