‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

ரஷியா - உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்

ரஷியா - உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்

News image

கைதிகள் பரிமாற்றம் - ap

Updated On :12 ஏப்ரல் 2026, 1:55 am IST

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு ரஷியா-உக்ரைன் போரில் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளும் தலா 175 போா்க் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.

உக்ரைனின் 175 ராணுவ வீரா்களுடன் 7 பொதுமக்களும் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினாா். இவா்களில் பெரும்பாலானோா் கடந்த 2022 முதல் ரஷியாவின் பிடியில் இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இக்கைதிகள் பரிமாற்றத்தின்போது, ரஷியாவும் தனது 175 வீரா்களையும், குா்ஸ்க் பகுதியைச் சோ்ந்த 7 ரஷிய குடிமக்களும் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னெடுப்பில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவாா்த்தைகள் நிலப்பரப்பு விவகாரங்களால் முடங்கியுள்ள போதிலும், போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்கள் ஒப்படைப்பு, கைதிகள் பரிமாற்றம் போன்ற மனிதாபிமான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) கொண்டாடப்படும் ஈஸ்டா் பண்டிகையையொட்டி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தம் தொடங்கியது.