தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!

ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் தரையிறங்கியது குறித்து...

News image

பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு! - படம்: ராய்ட்டர்ஸ்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:26 am

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர். 10 நாள் ஆய்வை வெற்றிரமாக முடித்துக்கொண்டு 4 வீரர்களும் பூமிக்கு வந்தனர்.

ஆர்டெமிஸ்-2 விண்கலமும், அதன் நான்கு பேர் கொண்ட குழுவும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

ஓரியான் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5.37 மணிக்கு சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் தரையிறங்கியது.

ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்கள் அடங்கிய இக்குழு, தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளனர்.

முன்னதாக, நிலவின் மறுபக்கத்தை அடைவதற்காக மனித வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியிலிருந்து சுமார் 2,52,756 மைல்கள் தொலைவுக்கு விண்வெளியில் பயணித்து இக்குழு புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன்னதாக 1970-இல், ‘அப்போலோ 13’ விண்கலம் மேற்கொண்ட தொலைதூர பயணமே சாதனையாகக் கருதப்பட்டது. தற்போது அச்சாதனையை முறியடித்துள்ள இக்குழு, நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமாா் 4,070 மைல்கள் தொலைவில் பறந்தது.

நிலவின் மறுபக்கத்தைக் கடந்த சுமார் 6 மணி நேர ஆய்வின்போது, நிலவின் மேற்பரப்பில் விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் ‘ஒளிப் பிழம்புகளை’ விண்வெளி வீரர்கள் நேரடியாகக் கண்டு வியந்தனா்.

பூமியிலிருந்து என்றும் காண முடியாத நிலவின் அப்பகுதியை வீரர்கள் உன்னிப்பாகக் கவனித்தபோது, விண்கற்களின் மோதலால் நிலவின் தரைப்பகுதி அதிர்வதை அவா்கள் பதிவு செய்தனர்.

நிலவின் மறுபக்கத்தைக் கடக்கும்போது சுமார் 40 நிமிடங்கள் பூமிக்கும் விண்கலத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இது விண்வெளிப் பயணத்தின் மிகவும் சவாலான பகுதியாகக் கருதப்பட்டது. மீண்டும் தொடர்பு கிடைத்ததும், வீரா்கள் உற்சாகத்துடன் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனர்.

இந்த நிலையில், விண்வெளி வீரர்கள் ரீட், விக்டர், கிறிஸ்டினா மற்றும் ஜெர்மி ஆகியோர் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

Summary

NASA's Artemis crew, who conducted research on the Moon, returned safely to Earth. Having successfully completed a 10-day mission, the four astronauts returned to Earth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.