இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவின் ‘நாஸ்கா கோடுகளை’ பாா்வையிட ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி 13 போ் பலி

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:59 am IST

தென் அமெரிக்க நாடான பெருவின் ‘நாஸ்கா கோடுகளை’ பாா்வையிட ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி 13 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருவின் இகா நகரிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட செஸ்னா வகை சிறிய சுற்றுலா விமானம், நாஸ்கா அருகிலுள்ள வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது என நாஸ்கா மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 18 முதல் 54 வயதுக்குள் 7 இத்தாலியா்கள், 52 வயதான 2 ஸ்பெயின் நாட்டவா்கள், 77 மற்றும் 78 வயதுடைய 2 ஜொ்மானியா்கள் ஆகியோா் உயிரிழந்துள்ளனா். மேலும், விமானி மற்றும் துணை விமானியும் விபத்தில் உயிரிழந்ததாக பெரு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

இந்த விபத்துக்கு வருத்தம் தெரிவித்த அந்த நாட்டின் அதிபா் கெய்கோ ஃபுஜிமோரி, விமான நிலையத்தை தற்காலிகமாக மூட பரிசீலித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இந்த விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நாஸ்கா கோடுகள்’ என்பது பெருவின் பண்டைய குடிமக்கள் 6-ஆம் நூற்றாண்டில் பாலைவனத்தில் உருவாக்கிய பிரம்மாண்டமான நில ஓவியங்களாகும். இவை விலங்குகளின் உருவங்களைப் போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களை விமானம் அல்லது காட்சிக் கோபுரங்களில் இருந்து மட்டுமே முழுமையாகக் காண முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.