தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!

ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி சிலருடன் கலந்துரையாடுவது போல விடியோ வெளியிட்டது பற்றி...

News image

ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி சிலருடன் உரையாடும் காட்சி. - படம் - விடியோ கிளிப்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 8:40 am IST

ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், அவர் சிலருடன் கலந்துரையாடுவது போல விடியோ ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் கடந்த பிப். 28 ஆம் தேதி அப்போதைய ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரது மகனான மோஜ்தபா கமேனி சில நாள்களிலேயே உச்ச தலைவராகப் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காரணம்காட்டி தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கில்கூட அவர் பங்கேற்கவில்லை.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்தும்கூட இருக்கலாம் என அவ்வபோது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், ஈரானின் அதிகாரப்பூர்வ மெஹர் செய்தி நிறுவனம், தேதி குறிப்பிடப்படாத விடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த விடியோவில் மோஜ்தபா கமேனி சில நபர்களுடன் உரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், மோஜ்தபா கமேனி குறித்த நெடுநாள் விமர்சனங்களுக்குப் பிறகு, அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட முதல் விடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

While some Israeli news outlets reported that Iran's Supreme Leader Mojtaba Khamenei was in critical condition, Iran has released a video showing him conversing with a few individuals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.