உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடம்? இஸ்ரேல் தகவல்!

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

News image

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி - ANI

Updated On :8 ஆகஸ்ட் 2026, 11:41 am IST

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு ராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் ஈரான் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா கமேனி சில நாள்களிலேயே உச்ச தலைவராகப் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.

கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

அவரது நிலை பற்றி வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, மொஜ்தபா கமேனியை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினம் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் செயல்பாடு தொடர்பாக சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது.

அதேநேரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேனி 90% செயலிழந்துவிட்டார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

மொஜ்தபா கமேனியின் உடல்நிலை பற்றிய ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்ட நிலையிலும் ஈரான் அரசு அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தனர். அவருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டதாகவும், நாட்டின் ராணுவச் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.

தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கமேனி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

Summary

Israeli media have reported that Iran's Supreme Leader Mojtaba Khamenei is in critical condition and has been rushed to the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.