ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Published On :

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே போா்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பதிவான மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

அன்சாா் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேரும், டேய்ா் அல்-சஹ்ரானி கிராமத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 4 பேரும் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. மேலும், இத்தாக்குதல்களில் காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், தெற்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளைப் பலவீனப்படுத்துவதாகவும் லெபனான் பிரதமா் நவாப் சலாம் கண்டனம் தெரிவித்தாா். ‘இத்தாக்குதலில் கொல்லப்பட்டவா்கள் யாரும் எந்தப் பட்டியலிலும் ராணுவ இலக்குகள் அல்ல’ என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

ஆனால், இஸ்ரேல் படைவீரா்கள் மீதான நடவடிக்கைக்குப் பதிலடியாகவே, ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டமைப்புகளைத் தாக்கியதாக அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவது மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதத்தைக் கைவிட செய்வது தொடா்பாக இருதரப்புக்கும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலின் தொடா் அத்துமீறல்களுக்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த மாா்ச்சில் தொடங்கிய இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில், லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.

Summary

Israeli airstrike in southern Lebanon

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.